×

காஞ்சனா-3 பட நடிகை அலெக்ஸாண்ட்ரா தற்கொலை

சென்னை: காஞ்சனா-3 படத்தில் ராகவா லாரன்சுக்கு, ஜோடியாக நடித்த ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா கோவாவில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 24. ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி அலெக்ஸாண்ட்ரா ஜாவி. இவர் ரஷ்யாவில் பல்வேறு விளம்பர படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான காஞ்சனா-3 படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் அலெக்ஸாண்ட்ரா நடித்திருந்தார். அவர் படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக நடித்தார். சில மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை தந்ததாக அலெக்ஸாண்ட்ரா புகார் அளித்தார். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது காதலருடன் கோவாவில் உள்ள சியோலிம் பகுதியில் அலெக்ஸாண்ட்ரா வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று முன்தினம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags : Kanzana ,Alexandra , Kanzana-3, film actress Alexandra, suicide
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன்: அலெக்சாண்ட்ரா...